முதல்முதல் உன் வேல் விழி பார்த்து என்னை மறந்தேன்
கருங்கூந்தல் அருவியில் என் மனதை இழந்தேன்!
கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்று என்னை உணர வைத்தாய்
மறந்து போன கவிதை ஊற்றை, கடல் போல் என்னுள் பெருக வைத்தாய்.
திருக்குறளையே திருத்தி எழுத முனைந்தேன்,
குழல் இனிது யாள் இனிது என்பதம் மக்கள் உன் சொல் கேளா தவர்
கைக்கெட்டா கானல்நீர் போல் கண்கள் காணும் கனவு நீ
பிரம்மன்னிற் சிறந்த சிற்ப்பியின் சித்தத்தில் செதுக்கப்பெற்ற பொற்சிலை நீ.
புன்னகைக்கு அரசியே!
மொத்த அழகிற்க்கும் அடைக்கலம் தந்த உன் மனதில் இடம் உண்டா எனக்கு?
Posted via Blogaway
No comments:
Post a Comment